இலங்கைக்கு படையெடுத்துள்ள சீன முதலீட்டாளர்கள்! ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர்

25 683916dd2b9f9

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று(29.05.2025) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் சீன முதலீட்டாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வாங் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும், ஜனாதிபதி திசாநாயக்கவின் நிர்வாகத்தால் பின்பற்றப்படும் தெளிவான கொள்கையையும் கருத்தில் கொண்டு, இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் சீன அமைச்சருடன் 100க்கும் மேற்பட்ட சீன முதலீட்டாளர்கள் இந்த பயணத்தின்போது, இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version