photo 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சுயாதீன எம்.பிக்களுடன் சீனத் தூதர் அவசர பேச்சு!

Share

நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் உறுப்பினர்களில் 7 பேருடன் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸி சென்ஹொங் அவசர சந்திப்பு நடத்தியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய முறையை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது எனக் கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறு, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, அத்துரலிய ரத்ன தேரர், தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேர் பங்கேற்றுள்ளனர்.

இதேநேரம், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தத் தொடர்ந்தும் சீனா தமது உதவிகளை வழங்கும் என அந்த நாட்டுப் பிரதமர் லீ குயாங்க் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நேற்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...