sajith 3
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையை மீட்க சீனாவின் ஆதரவு தேவை! – சஜித் கோரிக்கை

Share

இலங்கையை தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்கச் சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தப் பேரிடர் தருணத்தில் இலங்கைக்குச் சகோதரத்துவக் கரம் நீட்டும் சீனாவுக்குத் தான் நன்றி தெரிவிப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால இரு தரப்பு உறவுகளையும் இதன்போது நினைவு கூர்ந்தார்.

இலங்கையைத் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்காகச் சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் தலையீடு செய்யுமாறும் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 21
செய்திகள்உலகம்

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு: மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு எச்சரிக்கை!

அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் உள்ள வலேரோ (Valero) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று (மார்ச்...

21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...