கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்ட கால்நடைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கால்நடைத் தீவனத் தட்டுப்பாடு காரணமாக இந்தநிலை ஏற்படலாம் என கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை கடுமையாக உயரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சி சுமார் 900, ரூபாவாகவும் முட்டை ஒன்று 40-50 ரூபா வரையும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக கடன் கடிதம் வழங்க முடியாமல், கோழி தீவனம் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் இன்னும் பல மூடப்படும் எனவும் கால்நடை தீவன உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் சுசில் குமார ஹீன்கெந்த தெரிவித்தார்.
#SrilankaNews