2
இலங்கைசெய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை தொடர்பில் கோரிக்கை

Share

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணை சர்வதேச விசாரணையாகி எம்மண்ணில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டிற்கு உலகம் வரவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பாக தமிழ் சமூகம் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றது. சித்துபாத்தி இந்து மயானத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மனித எலும்புகள், எலும்புக்கூடுகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது.

எத்தனை பேரை இழந்து எத்தனை பேர் காணாமல் போன சூழலில் கவலையோடு இருக்கின்ற போது இந்த புதைகுழி அதிர்ச்சியையும் மிகுந்த துயரத்தையும் தந்திருக்கின்றது.

எனவே இந்த செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டும். சர்வதேச ரீதியாக விசாரணை இடம்பெற வேண்டும். ஒரு உண்மையான தீர்வு இந்த விடயத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

இன்று இந்த முயற்சியில் ஈடுபடுகின்ற நீதித்துறை சார்ந்தவர்களை நாம் நன்றியோடு போற்றுகின்ற அதே வேளையில் இந்த விசாரணை தொடர வேண்டும். இந்த விசாரணை ஊடாக தமிழினத்திற்கு நடைபெற்ற கொடுமை ஒரு முடிவுக்கு வரவேண்டும்” என அவர் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...