rtjy 211 scaled
இலங்கைசெய்திகள்ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24.09.2023, ஞாயிற்றுக் கிழமை – Today Rasi Palan

Share

இன்றைய ராசி பலன் 24.09.2023, ஞாயிற்றுக் கிழமை – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 7 சனிக் கிழமை. சந்திரன் தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். தசமி திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். மிதுன, கடக ராசியில் உள்ள மிருகசீரிஷம், திருவாதிரை சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மனதிற்கு நிறைவான நாளாக இருக்கும். ஆன்மீகப் பயணங்கள் மனதிருப்தியை தரும். அஸ்வினி, பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று மேன்மை தரக்கூடிய நாளாக இருக்கும்.இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் நல்ல வெற்றியை, நன்மையையும் தரக்கூடியதாக இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கும். நண்பர்களின் வருகை மனமகிழ்ச்சியை தரும். சிலருக்கு பயணங்களால் நல்ல அணுகுல பலன்கள் உண்டாகும். இன்று மனதிற்கு நிறைவான நாளாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய கேது பகவான் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபத்தை தருவார்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் கூடுதல் கவனம் தேவை.மாலை நேரத்தில் மனக்குழப்பம் தீரும்.வெற்றிகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

ராகு காலத்தில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மனக்குழப்பம் தீரக்கூடியதாகவும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் வாய்ப்புள்ளது. நீண்ட தூர பயணங்கள் சிலருக்கு ஏற்படும். சந்திர பகவான் ஆறாம் இடத்தில் இருப்பதால் சிலருக்கு தோல் சார்ந்த வியாதிகள் ஏற்படும். நிறைவு தரக்கூடிய நாளாகவும், பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்படும். ஆலய தரிசனம் சிறப்பாக அமையும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மனத்தெளிவு ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் தீரவும், பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் சாதகமான நாள். நீண்ட நாட்களாக இருந்து வந்த தூக்கமின்மை பிரச்சனை, உடல் ஆரோக்கியம் பிரச்சனைகள் நீங்கி மனதிற்கு ஆறுதல் கிடைக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். ஆன்மீக பயணங்கள் செல்லக்கூடிய சூழல் உருவாகும். குடும்ப விவகாரங்களில் பிரித்து உண்டாகும். 4ம் இடத்தில் இருக்க கூடிய சந்திர பகவான் குடும்பத்தில் ஒற்றுமையும், பிரிந்த சகோதர சகோதரிகள் ஒன்று சேரவும், உறவு பலப்படவும் வாய்ப்புள்ளது. இன்று கொடுக்கல் வாங்கலில் மனநிம்மதி கிடைக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகம் தரக்கூடிய நாளாக இருக்கும். வீட்டிற்கு வரக்கூடிய உறவுகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். இன்று மன அமைதியும், சந்தோஷமும் கிடைக்கும். எடுத்து காரியத்தில் வெற்றிகள் உண்டு.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எடுத்துக் காரியத்தில் வெற்றி உண்டாகும். பல நாட்களாக இருந்து வந்த மனச்சோர்வு நீங்கும். பெண்களுக்கு உயர்வான நாளாக அமையும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ராசியில் சந்திரன் அமைந்திருப்பது, மன ஆரோக்கியத்தை தரும். மனதில் இருக்கக்கூடிய குறைகள், பய உணர்வு, உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி நிம்மதி உண்டாகும்.சந்தோசமான ஞாயிற்றுக்கிழமையாக அமையும்.. எடுத்துக் காரியத்தில் வெற்றி உண்டாகும். இன்று ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு திருப்தி தரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைபாடு, குழந்தையின்மை பிரச்சனை, மன முயற்சிகளுக்கு சாதகமான நாளாக இருக்கும். இன்று திருப்பதி ஏழுமலையான் வழிபாடு செய்யலாம்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு திருப்தியான நாளாக அமையும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம், சஞ்சலம் தீர கூடிய நாளாக இருக்கும். மன அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்றைய நாள் மேலும் சிறப்படைய குலதெய்வ வழிபாடு செய்யவும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.எடுத்துக்காலத்தில் நல்ல வெற்றி உண்டாகும். நீண்ட தூர பயணம் பிரயாணம் செல்ல வாய்ப்புள்ளது. எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதிற்கு ஆறுதலான நாளாக இருக்கும்.
இன்று நீங்கள் பெண் தெய்வ வழிபாடு செய்வது சிறப்பு.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...