நீர் வழங்கலுக்கு இணையமுறையின் கீழ் கட்டணம்!!
நீர் வழங்கல் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு, இணைய முறையின் கீழ் கட்டணங்களை செலுத்துமாறு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் திலின எஸ். விஜயதுங்க, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்த இணைய முறையின் கீழ் கட்டணம் செலுத்தும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 011 – 2623623 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும், அவர் தெரிவித்தார்.
Leave a comment