மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தூக்கிட்ட நிலையில், அவரது வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இலுப்பைக்கடவை கள்ளியடி பகுதியில் வசித்து வரும் வவுனியாவைச் சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது–14) என்ற சிறுவனே இவ்வாறு நேற்றுமுன்தினம் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவன் கள்ளியடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் திருடினான் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளரின் மகன் மற்றும் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் மகனை நித்திரையாக்கிவிட்டு தாயார் குளிக்க சென்ற நிலையில் தாக்கியவர்கள் மீண்டும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்த தாய் ஓடி வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தான் என தாயார் தெரிவித்துள்ளார்.
இது தற்கொலை இல்லை எனவும் மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு விவரம் தெரியாதவன் இல்லை எனவும் அவனது தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment