பாடசாலை நாட்களில் மாற்றம்

piasri fernando

பாடசாலை கல்வி நடவடிக்கைளை திங்கள் , செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கு வீட்டை அடிப்படையாகக்கொண்ட கல்வி நடவடிக்கையை முனனெடுத்தல் அல்லது இணைய வழி மூலமான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஆசிரியர்கள் அனைவரும் ஆகக் குறைந்தது வாரத்தில் 3 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் 3 தினங்களுக்கு மாத்திரம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

இருப்பினும் இவ்வாறான, பாதிப்புகள் இல்லாத நாட்டின் சில மாவட்டங்களில் வாரத்தின் ஐந்து தினங்களிலும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை வட மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வட மாகாண பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் வாரத்தின் ஐந்து நாட்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version