தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் அனுமதியுடன் சட்டரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்துவது மக்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எனவே, கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்த தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment