தனியார் பேருந்துகளில் கட்டணம் செலுத்தும் நவீன முறைமை அறிமுகப்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசியின் ஊடாக, கியூஆர் குறியீட்டு நடைமுறை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டணம் செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டணம் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 163 இலக்க பேருந்து மார்க்கமான தெஹிவளை – பத்தரமுல்ல மார்க்கத்தின் பயணிக்கும் ஒரு பேருந்தில் இதனை முதல் கட்டமாக நடைமுறைப்படுத்த திட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment