chandrika
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகாவிடின் பெரும் விளைவைச் சந்திப்பீர்! – ராஜபக்சக்களுக்கு சந்திரிகா எச்சரிக்கை

Share

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காகவே பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கோரி வருகின்றனர். ஒருவரை மட்டும் பதவி விலகக் கோரும் இந்தச் சுயலாப அரசியல் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல. வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஒரே தடவையில் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டாபயவும் மஹிந்தவும் பதவி விலக வேண்டும் எனக் கோரியே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் அலரி மாளிகைக்கு முன்பாகவும் இரவு பகலாக மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் ஆணையின் பிரகாரம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும் பிரதமரும் மக்களின் இந்தக் கோரிக்கைக்குச் செவிசாய்க்க வேண்டும்.

காலம் தாழ்த்தாது கெளரவமாக இருவரும் பதவி விலகி புதிய ஆட்சிக்கு வழிவிட வேண்டும். பிரதமர் மஹிந்தவை மட்டும் பதவி விலக்கி ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இடைக்கால அரசு அமைந்தால் அதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் போராட்டங்கள்தான் மேலும் வீரியமடையும்.

எனவே, மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லையேல் பெரும் விளைவுகளை இருவரும் சந்திக்க வேண்டிவரும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் இரட்டை வேடத்தில் இருப்பதால் நாடாளுமனத்தில் பிரேரணைகள் மூலம் அரசையும் ராஜபக்சக்களையும் கவிழ்ப்பது எந்தளவுக்குச் சாத்தியம் என்று இப்போது சொல்ல முடியாது. எனினும், பிரேரணைகள் வாக்கெடுப்புக்கு வந்தால் ஆளும் – எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மை முகங்களை அறிந்துகொள்ள முடியும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...