சவால்மிக்க நிலைமைகளின் கீழ் மிகவும் கஷ்டமான காலப்பகுதியை இலங்கை கடந்து கொண்டிருக்கிறது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்நிய செலாவணி மற்றும் உணவுப் பிரச்சினை சர்வதேசததின் பொதுப் பிரச்சினையாக மாறியுள்ளது.
இன்று ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை பல சவால்களுக்கு முகம் கொடுக்க இருக்கிறது.
இதற்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் தற்சமயம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அசோக டி சில்வாவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் ஊடாக இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது – என்றார்.
Leave a comment