இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன், மலையகத்துக்கான இந்தியாவின் உதவித் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில் இ.தொ.காவின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.`
#SriLankaNews
Leave a comment