tamilni 465 scaled
இலங்கைசெய்திகள்

காலி துறைமுகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முந்திய கல் நங்கூரம்

Share

காலி பழைய துறைமுகத்தின் இறங்குதுறைக்கு அருகில் 12 அல்லது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல் நங்கூரம் ஒன்று கடலுக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பழைய நங்கூரங்கள், ஒன்றாகக் கட்டப்பட்டு நங்கூரமாகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கிகள் போன்றவை இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கல் நங்கூரம் கடந்த 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு சொந்தமானது என்பது சமீபத்திய நாட்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகை மூன்று துளைகள் கொண்ட நங்கூரம் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் சீனக் கப்பல்கள் மற்றும் அரபுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்ட கடற்பகுதியில ​மேலதிக தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவ்விடத்தில் கப்பல் எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...