பலாங்கொடை பிரதேசத்தில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 1700 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சீமெந்தின் கட்டுப்பாட்டு விலை 1275 ரூபாவாகும். ஆனால் கடந்த முதலாம் திகதியிலிருந்து சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவால் உயர்ந்துள்ளதாகவும் தற்போது சீமெந்து மூடை ஒன்று 1700 ரூபாவுக்குக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment