இலங்கை மின்சார சபைக்கு மூடுவிழாவா? வர்த்தமானி வெளியானால் இருளில் மூழ்கும் அபாயம்!

image 2026 01 22 092020641

இலங்கை மின்சார சபையைக் (CEB) கலைப்பதற்கான திகதியை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக 24 தொழிற்சங்கங்கள் அதிரடியாக எச்சரித்துள்ளன.

ஊழியர்களின் 8 முக்கிய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை சாதகமான பதில் வழங்காத நிலையில், பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் இந்தப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். இந்தத் திடீர் போராட்டத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version