24 66102467677aa
இலங்கைசெய்திகள்

சொகுசு வாகனங்கள் கடத்தல்: 500 கோடி ரூபா வரி இழப்பு

Share

வெவ்வேறு நபர்களுக்கு சொந்தமான ஐம்பத்தொரு சொகுசு வாகனங்களின் பதிவை மாற்றும் நடவடிக்கையை தடுக்கும் வகையில் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (05) மோட்டார் போக்குவரத்து திணைக்கள (Department of Motor Traffic – Narahenpita) ஆணையாளருக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சொகுசு வாகனங்கள் சுங்கத்தினுள் கடத்தப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரி இழப்பு ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட 51 வழக்குகளை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சொகுசு வாகனங்கள் மோட்டார் வாகன திணைக்களத்தின் கணினி அமைப்பில் பொய்யான தகவல்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மன்றில் உண்மைகளை சமர்ப்பித்துள்ளது.

ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷா சமந்தப்பெரும, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்கும் போது மேலும் தெரிவிக்கையில்,

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இரகசியப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் 2015ஆம் ஆண்டு முதல் 178 சொகுசு வாகனங்கள் இலங்கைக்குள் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வாகனங்களை இரகசியமாக பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுங்கத்தினுள் கடத்தப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வாகனங்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் ஏழு அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சொகுசு வாகனங்கள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை கடத்தப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளை அழித்து பொய்யான தரவுகளுடன் பதிவு செய்யப்பட்டு 2005 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட பொய்யான தகவல்கள் பதிவில் இடம்பெற்றுள்ளன.

சொகுசு வாகனங்களின் தற்போதைய பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் தோராயமான மதிப்பீட்டில் ஐம்பத்தொரு வழக்குகளைத் தாக்கல் செய்த பின்னர் ஆணையம் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட வாகனங்களை வேறு தரப்பினருக்கு மாற்றுவதைத் தடுக்கும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...