கஞ்சா செடி வளர்ப்பு – இளைஞர்கள் கைது!
கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 4 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம், நுவரெலியா கந்தப்பளை பொலிஸ் பிரிவிவுக்கு உட்பட்ட பெத்துன்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கந்தப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் குறித்த இளைஞர்கள் வீட்டுப்பகுதியை சுற்றிவளைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது தண்ணீர் தாங்கிக்கு அருகில் வளர்க்கப்பட்டு வந்த மூன்றரை அடி உயரமான இரு கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இவர்களை நுவரெலியா மாவட்ட நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment