கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சர்ச்சையில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, மீண்டும் கஞ்சா பற்றி கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கஞ்சா செய்கையின் மூலம் நாட்டின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும், ஏற்றுமதிமூலம் இதனை செய்யலாம் எனவும் அரசுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
” கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.
இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.” – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.
#SriLankaNews
Leave a comment