இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சோடாப்போத்தல்களின் காலாவதி திகதியில் மாற்றம் செய்தவருக்கு தண்டத்துடன் வியாபார அனுமதி இரத்து!

IMG 20230524 WA0062
Share

சோடாப்போத்தல்களின் காலாவதி திகதியில் மாற்றம் செய்தவருக்கு தண்டத்துடன் வியாபார அனுமதி இரத்து!

சோடாப்போதுதல்களின் காலாவதி திகதியில் மாற்றம் செய்த விநியோகஸ்தரிற்கு 110,000/= தண்டத்துடன் வியாபார அனுமதியை இரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகர ஆணையாளரிற்கு நீதிமன்றம் பரிந்துரையளித்துள்ளது.
கடந்தமாதம் 26.04.2023 அன்று யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் ற்கு திகதியில் மாற்றம் செய்து சோடாப்போத்தல்கள் யாழ்நகர் கடைகளிற்கு விநியோகிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து யாழ்நகர் கடைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காலாவதி திகதியில் மாற்றம் செய்து மற்றும் திகதி காலாவதியான சோடாப்போத்தல்கள் விநியோகஸ்தரால் விநியோகிக்கப்பட்டமை தெரியவந்தது.
இதனையடுத்து கடைகள் 02 ற்கு விநியோகிக்கப்பட்ட சோடாப்போத்தல்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த விநியோகஸ்தரின் வைமன் வீதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையினை முற்றுகையிட்டு திடீர் பரிசோதனை மேற்கொண்டனர். இதன்போது காலாவதி திகதியில் மாற்றம் செய்த 1100 சோடாப்போத்தல்கள் விநியோகத்திற்காக தயார் நிலையில் இருந்த போது கைப்பற்றப்பட்டதுடன், திகதி காலாவதியான சோடாப்போத்தல்களும் என மொத்தம் 1710 மனித பாவனைக்கு உதவாத சோடாப்போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து குறித்த விநியோகஸ்தரிற்கு எதிராக யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் கடைகளிற்கு விநியோகம் செய்தமை தொடர்பில் 02 வழக்குகளும், பொது சுகாதார பரிசோதகர் தி.கிருபனால் களஞ்சியசாலை குறைபாடுகளுக்காக ஓர் வழக்கும் என 03 வழக்குகள் இன்றையதினம் 24.05.2023 மேலதிக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து 03 வழக்குகளுக்கும் குறித்த விநியோகஸ்தரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் 110,000/= தண்டம் விதிக்கப்பட்டது. அத்துடன் யாழ் மாநகர சபையால் குறித்த விநியோகஸ்தரிற்கு வழங்கப்பட்ட வியாபார அனுமதியை இரத்து செய்வதற்குரிய பரிந்துரையினை, 03 வழக்குகளிற்கும் தனித்தனியே யாழ் மாநகர சபை ஆணையாளரிற்கு வழங்கி கட்டளை நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டது.
#srilankaNews
Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...