மத்திய வங்கி ஆளுநராக கப்ரால்!
அஜிட் நிவாட் கப்ரால் மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் இன்றைய தினம் (14) அவருடைய நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
நாளைய தினம் அவர் தனது ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியினையை ஏற்றுக்கொள்வதற்காக நேற்றைய தினம் அவர் (13) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற ஆளுநர் நாயகத்திடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment