ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (25) மாலை வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான பின்னர் நடைபெறும் 2ஆவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
இடைக்கால அமைச்சரவை பதவியேற்ற நாளில், முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை ரணில் விக்கிரமசிங்க நடத்தியிருந்தார்.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம், சர்வக்கட்சி அரசு மற்றும் இடைக்கால வரவு- செலவுத் திட்டம் என்பன தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளன. முக்கியமான சில அமைச்சரவைப் பத்திரங்களும் முன்வைக்கப்படவுள்ளன.
#SriLankaNews
Leave a comment