ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும், அமைச்சர்கள் இராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே, சமகால மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, மேற்படி பதவி துறப்பு கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
மேற்படி கடிதங்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (03) சந்தித்து பேச்சு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்ற பின்னர் புதிய அமைச்சரவை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
#SriLankaNews
Leave a comment