கொழும்பு- கண்டி பிரதான வீதியின் மாவனெல்ல- உதுவகந்த பிரதேசத்தில் இரண்டு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று பகல் இந்த விபத்து இடம்பெற்றதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இ.போ.ச பஸ் ஒன்றும் தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதாகவும் இதன்போது காயமடைந்தவர்கள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
#SriLankaNews
Leave a comment