களுத்துறை – பண்டாரகம தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உரிய இடத்துக்கு முன்னதாகவே பயணிகளை இறக்கிவிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக, குறித்த பயணிமீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநரை பண்டாரகம பொலிஸார் நேற்று முன்தினம்(25) கைது செய்துள்ளனர்.
பண்டாரகம – கோனதூவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment