எழுவான் குளம் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வண்ணாத்திவில்லு,புத்தளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
பஸ்ஸின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment