தனியார் பேருந்து தொழிற்சங்கங்களுடனான சந்திப்பையடுத்து, பேருந்துக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனையடுத்து ஓரிரு தினங்களில் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
இதேவேளை பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் பஸ் கட்டணமும் அதிகரிக்குமா என எல்லோரும் கேட்கின்றனர். இதற்கு ஆம் என்பதே பதில். கட்டணம் உயர்வை தடுக்க முடியாது. பஸ் உரிமையாளர்கள் மற்றும் பயணிகளின் கருத்துகளை உள்வாங்கு, தொகை நிர்ணயிக்கப்படும்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நான்கு நாட்கள் அவகாசம் கோரியுள்ளது. அதன்பின்னர் முடிவெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment