bus 1
இலங்கைசெய்திகள்

பஸ் கட்டணம் குறைகிறது!

Share

பஸ் கட்டணங்கள் எதிர்காலத்தில் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் என்றார்.

“போக்குவரத்து கட்டணத்தை குறைக்கலாம், ஏனென்றால் டொலருக்கு செலுத்த வேண்டிய ரூபாய் அளவு குறைக்கப்பட்டால், நமது எரிபொருள் செலவு குறையும். மேலும், உதிரி பாகங்கள் மற்றும் இறக்குமதி பொருட்களின் செலவைக் குறைப்பதன் பலனையும் மக்களுக்கு கொடுக்கலாம்.

விலை சூத்திரத்திற்கு ஏற்ப பஸ் கட்டணம் குறைக்கப்படும். விலை சூத்திரத்துக்கு அமைய, விலை குறையும் போது, ​​வாடிக்கையாளர் குறைவின் பலனைப் பெறுவார்.மேலும், உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது, ​​கட்டணம் அதிகரிக்கப்படும்” என்றார்.

இதேவேளை, எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உற்பத்தியாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் வீதிகளின் ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...