யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மணற்காடுப் பகுதியில் மீட்கப்பட்ட சடலத்தை சிம்பன்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து விசாரணைகள் எவையுமின்றி பொலிஸார் புதைத்துள்ளனர் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
நவம்பர் 16ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கடற்பரப்பில் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவனையில் 5 சடலங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக கரையொதுங்கிய சடலத்தை பொலிஸார் புதைத்துள்ளனரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதேவேளை குறித்த சடலம் சிம்பன்சி குரங்கின் சடலம் என அந்தச் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமராட்சி கடற்பரப்பில் கடந்த வாரம் வெவ்வேறு தினங்களில் 5 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன என்றும் அவை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவை தொடர்பில் தகவல்கள் கிடைக்காதமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் மணற்காடு கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் நீதிமன்றத்திற்கு எவ்வித தகவல்களும்வழங்கப்படாமல், புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment