பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு!

IMG 20230427 WA0141

பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு!

மல்லாக்கத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பட்டபகலில் மல்லாகத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த போது வீடுடைத்து நகைகள் திருடப்பட்டன.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.
#srilankaNews
Exit mobile version