காசாவில் பாடசாலை அமைக்கப்போகும் ரணில்
போர் முடிவடைந்த பின்னர் காசா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உறுதியளித்துள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி, கட்டுகெலே ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “இலங்கை தற்போது ரமழான் நோன்பை அனுஷ்டிக்கின்ற போதும் காசா பகுதியில் மிகவும் சோகமான நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகம் சுமார் முப்பத்தைந்து உயிர்களை இழந்துள்ளது. அதனால்தான் இந்த ஆண்டு தேசிய ரம்ஜான் பண்டிகையை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து அந்த பணத்தை காசா முஸ்லிம் மக்களுக்கு வழங்கினோம்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் காசா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதாகவும் உறுதியளித்துள்ளோம். பலஸ்தீன அரசின் அழிவை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.
எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கு நாங்கள் ஆதரவை வழங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.