அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வரைபு சமர்ப்பிக்கப்படும்போது தீர்வு குறித்து நிதி அமைச்சரால் தெளிவாக அறிவிக்கப்படும்.
இதனை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்று காரணமாக நாட்டில் கல்வித்துறை பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.
இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிபர் ஆசிரியர்களால் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதிபர் ஆசிரியர்களின் நீண்ட கால சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்க அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு– செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment