2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சரால் நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வரவு – செலவுத் திட்ட மூன்றாவது விவாதம் மற்றும் வாக்களிப்பு எதிர்வரும் டிசெம்பர் 10 ஆம் திகதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என ஆளும் கட்சியின் கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
Leave a comment