அலுபோமுல்ல சாந்தி மாவத்தையிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான ஹொரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இயங்கி வருவதாக கூறப்படும் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பாணத்துறை சாலிடு’ என்பவரின் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் ஹெரோயின் பொதிகளை பொதி செய்யும் நிலையமாக குறித்த வீட்டை பயன்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் ஒரு கிலோ போதைப்பொருளை பொதி செய்வதற்கு 250,000 ரூபாவை “பானதுறை சாலிடு” என்ற போதைப்பொருள் கடத்தக்காரர் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 25, 30 வயதுகளையுடையவர்கள் என்பதுடன், அலுபோமுல்ல, சாந்தி மாவத்தை, ஆரஞ்சு கோட்டை பகுதியில் வசிப்பவர்களாவர்.
#SrilankaNews
Leave a comment