வெட்டிப் படுகொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புத்தளத்தில் சகோதரனும் சகோதரியும் வெட்டிப் படுகொலை!

Share

புத்தளம் மாவட்டம், நவகத்தேகம – முல்லேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லேகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சகோதரனும், 25 வயதுடைய சகோதரியுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

குடும்பத்தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்போது கணவன் அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். அதேநேரத்தில் மனைவியையும் கணவன் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான 27 வயதுடைய சந்தேகநபர் காயங்களுக்குள்ளான நிலையில், புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...