24 66497b5897c5a
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு ஆதரவாக பிரித்தானிய அரசியல்வாதிகள்

Share

இலங்கையின் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு ஆதரவாக பிரித்தானிய அரசியல்வாதிகள்

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கப்பட வேண்டும் என முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவு நாளில் பிரித்தானிய அரசியல்வாதிகள் குரல் எழுப்பியுள்ளனர்.

இலங்கைத் தீவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் பிரித்தானிய கவனம் செலுத்தி வருவதோடு “தங்கள் அன்புக்குரியவர்களை சுதந்திரமாக நினைவுகூர” அனுமதிக்கும் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை பிரித்தானியா ஆதரிப்பதாக வெளியுறவு செயலாளர் டேவிட் கேமருன் (David Cameron) குறிப்பிட்டுள்ளார்.

எனினும், 2013இல் இலங்கையின் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்தபோது அங்கு உண்மை, நீதி மற்றும் அனைவருக்கும் பொறுப்புக்கூறலை பிரித்தானியா ஆதரிக்கும் என்று தாம் உறுதியளித்ததாக கேமருன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தமிழர்களுக்கான நீதியை உறுதி செய்வதில் இங்கிலாந்து தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பிரித்தானியாவின் டிஜிட்டல், கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறையின் பிரதி அரச செயலாளர் தங்கம் டெப்போனயர் (Thangam Debbonaire) கோரியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நாளில், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக தங்கம் டெப்போனயர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மோதல்கள் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது, ஆனால் இலங்கை அரசாங்கம் எந்தவொரு அர்த்தமுள்ள விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.

இத்துடன் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றவும் அது தவறிவிட்டது என்றும் தங்கம் டெப்போனயர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...