எதிர்வரும் காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
இதனை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைரஸ் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
சினோபார்ம் தடுப்பூசி ஏற்றிய இளையோர் மூன்றாவது டோஸ் ஏற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என நாம் கருதுகிறோம்.
எனினும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்குவது பொருத்தமானதாக இருக்கும். உலகளாவிய ரீதியில் ஆய்வுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.
மேலும் 50 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மூன்றாவது டோஸ் ஏற்றப்பட வேண்டிய அவசியமிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment