நாட்டில் சிமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் அதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒரு மாதத்துக்குள் இதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் சிமெந்து இறக்குமதியாளர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
தற்போது, சிமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் சிமெந்து இறக்குமதியாளர் நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment