கிளிநொச்சி மாவட்டத்தின் செல்வாநகர் கிராமத்திலுள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் என்ற வர்த்தகரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment