நாகர்கோயில் பகுதியில் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் படகுகள் ஆரம்பத்தில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக குறித்த படகுகள் தொழிலில் ஈடுபடாத காரணத்தினால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
படகுகள் தீக்கிரையாக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்ரணி அருள்ராஜ் என்பவருக்கு சொந்தமான பத்து படகுகளே இவ்வாறு விஷமிகளால் தீமூட்டி சொத்து அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment