மஸ்கெலியா நகரில் இருந்து புரவுன்லோ தோட்டத்திற்கு சென்ற மூன்று பேர் மது போதையில் பேருந்தில் ஏறி நடத்துனரை தாக்குதல் நடத்த முற்பட்ட போது பயணிகளுக்கு பற்று சீட்டு வழங்கும் இயந்திரம் உடைந்து உள்ளது
அத்துடன் பணம் காணாமல் போயுள்ளதகாகவும் அவிசாவளை அரச பேருந்து சபைக்கு உரித்தான பேருந்து நடத்துனர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து 31 மற்றும் 32 வயது உடைய ஆர்.விக்னேஸ்வரன் , மற்றும் ஆர்.ஜெயபால் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்டதாகவும் அவர்கள் இருவரும் எதிர் வரும் ஏப்ரல் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் பணித்துள்ளார். மேலும் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
#srilankaNews