யாழ் போதனாவில் குருதித் தட்டுப்பாடு! – உயிர்காக்க உதவுமாறு கோரிக்கை

3b495ad0 d9210262 blood donation

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத நிலையில் இரத்த வங்கி உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரத்த வங்கியில் இருப்பில் உள்ள குருதி வெறும் நான்கு நாட்களுக்கே போதுமானதாக உள்ளது எனவும், நான்கு நாட்களில் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி நடக்கவிருந்த இரத்ததான முகாம்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இரத்த வங்கியில் அல்லது இரத்ததான முகாம்களில் ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர்கள் மற்றும் புதிதாக இரத்ததானம் செய்யக்கூடியவர்கள் இரத்ததானம் வழங்குவதற்கு முன்வருமாறு யாழ்ப்பாணம் இரத்தவங்கி அழைப்பு விடுத்துள்ளது.

இரத்த தானம் செய்ய விரும்புபவர்களோ அல்லது இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்ய விரும்புவார்களோ 0772105375 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உயிர் காக்கும் பணியில் இணைந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version