பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ். நல்லைக் கந்தன் ஆலய வழிபாட்டுடன் யாழ்ப்பாண குடாநாட்டு சந்திப்பு, விஜயங்களை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்
இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பா.ஜ.க கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனை தமிழ் கலாச்சார முறைப்படி வழிபட்டார்.
அத்துடன், இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்திய கலாச்சார மத்திய நிலையத்தினை பார்வையிட்டதோடு நல்லை ஆதீன குரு முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடினர்
காலை 9 மணிக்கு நல்லூர் ஆலய சூழலில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்று ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச்சென்றதோடு செந்தில் தொண்டமான், யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஆகியோர் உடனிருந்தனர்.
#SriLankaNews