9 5
இலங்கைசெய்திகள்

கொழும்பில் உள்ள வாவியொன்றில் உயிரிழக்கும் பறவைகள் : வெளியான காரணம்

Share

கொழும்பில் (Colombo) உள்ள பேர வாவியில் கடந்த சில தினங்களாக விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணத்தை கொழும்பு மாநகர சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பற்றீரியா (bacteria) தொற்றினாலேயே விலங்குகள் உயிரிழப்பதாக பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த விலங்குகளின் திசுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைமை கால்நடை மருத்துவர் முகமது இஜாஸ் (Dr. Mohammad Ijaz) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த தினங்களில் வாத்துக்கள் உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு நகராட்சி சபை தலையிட்டு, ஹோமாகம கால்நடை புலனாய்வுப் பிரிவுடன் ஒருங்கிணைந்து, உயிரிழந்த வாத்துகளின் உடல் திசுக்களில் பல சோதனைகளை நடத்தியது.

மேலதிகமாக, இரத்த பரிசோதனைகள் மற்றும் மேலும் பல சோதனைகள் செய்யப்பட்ட நிலையில் Pasteurella multocida என்ற பற்றீரியாவால் இந்த பறவைகள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம்.

எனினும், நிலைமையை மேலும் ஆய்வு செய்ய நாங்கள் தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அத்துடன் மீதமுள்ள விலங்குகளுக்கு நுண்ணுயிர் எதிரி (Antibiotics) தடுப்பூசிகளை வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...