இலங்கை தொடர்பில் இந்தியா எடுத்துள்ள தீர்மானம்

24 66133d258df5d

இலங்கை தொடர்பில் இந்தியா எடுத்துள்ள தீர்மானம்

இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் பெரிய வெங்காயத்தை(Big Onion) விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் கையிருப்பை வைப்பதையும் நோக்கமாக கொண்டு இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்நிலையில் மோடி அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்'(Neighbours First Policy) என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ் தற்போது இலங்கைக்கு பெரிய வெங்காயத்தினை ஏற்றுமதி செய்ய இந்தியா தீர்மானித்துள்ளது.

மாலைத்தீவுக்கு அதிக அளவில் அத்தியாவசிய பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்த நிலையில், அதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version