பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக உயர்வு!

onion

நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை ரூ.290 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதேவேளை,பெரிய வெங்காயம் ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில்,
இறக்குமதியாகும் பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.

அத்துடன், பச்சை மிளகாய் உள்ளிட்ட சில மரக்கறிகளின் விலையும் தற்போது உயர்வடைந்துள்ளது.

#SrilankaNews

Exit mobile version