பிக்குவை தண்டிப்பதற்கு நீங்கள் யார்? கொதித்தெழும் பெளத்த பிக்கு!
நவகமுவ பகுதியில் பௌத்த தேரர் ஒருவர் சமூக பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் தமிழ் பௌத்தரான பொகவந்தலாவே ராகுல ஹிமி வெளியிட்டுள்ள காணொளியில்,
ஒரு பெண்ணுடைய ஆடையை பலாத்காரமாக பிடுங்கி, வீசி, அதனை வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றார்கள்.
பிழை செய்தவர்களுக்கும், வீடியோ எடுத்தவர்களுக்கும், அதனை பகிர்பவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என சாடியுள்ளார்.
தவறாக நடந்து கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு ஒரு வழிமுறை உண்டு. அதை விடுத்து வீடியோ எடுத்து முகநூலில் பகிர்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் உண்டு எனவும் தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Leave a comment