image e28df91035
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

‘வடக்கின் போர்’ – யாழ் மத்திய கல்லூரி வசம்

Share

“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான 116 ஆவது போட்டியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான 116 ஆவது போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

9,10,11 ஆம் திகதிகள் என மூன்று நாட்கள் இரண்டு இனிங்ஸ்களாக இப் போட்டி நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் பரியோவான் கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

image abad0bb20b

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது முதல் இனிங்ஸிலே 66ஓவர்கள் வரை வரை துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மத்திய கல்லூரி சார்பில் அஜே 74ஓட்டங்களையும், விதுஷன் 71 ஓட்டங்களையும் சன்சஜன் 42ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் யாழ் பரியோவான் கல்லூரி சார்பில் அபிஷேக் 3 விக்கெட்டுகளையும், கஜகர்ணன், விதுஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு தனது முதலாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய யாழ்பாணம் பரியோவான் கல்லூரி 51.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் யாழ் பரியோவான் கல்லூரி சார்பில் பென்சர் ஜெசியல் 43 ஓட்டங்களையும், சபேசன் 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் நியூட்டன் -4, கஜன் -3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த மத்திய கல்லூரி பலோன் முறையில் இரண்டாம் இனிங்சிற்காக முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்பத்தை யாழ் பரியோவான் கல்லூரிக்கு வழங்கியது.

அதன்படி இரண்டாம் இனிங்ஸ்ற்காக துடுப்பெடுத்தாடிவரும் பரியோவான் கல்லூரி 54 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் யாழ் பரியோவான் கல்லூரி சார்பில் ஜனந்தன் 26 ஓட்டங்களையும், பென்சர் ஜெசியல் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் பருதி -4, நியூட்டன் -3, விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

9 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஒரு விக்கட்டை இழந்து 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

image 1f892a0800

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...