1676201223 1676201124 Dead L e1676204503527
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பு படகு விபத்து – ஆசிரியர் உட்பட மூவரின் சடலங்கள் மீட்பு!

Share

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாத்தாமலை நான்பது வட்டை குளத்திலிருந்து தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஆசிரியர் ஒருவர் உட்பட 3 மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுமுந்தன்வெளி கஜமுகன் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் ஆசிரியர்களும், இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் எழுதவிருக்கும் மாணவர்களும், தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள் நாற்பதுவட்டடைக் குளம் அமைந்துள்ள பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை(12.02.2023) சுற்றுலா சென்றுள்ளனர்.

ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து மதிய உணவை சமைத்து  உண்டுள்ளனர். பின்னர் 3 ஆண் மாணவர்கள் அங்கிருந்த குளத்தில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணியை எடுத்துக் கொண்டு குளத்திற்குள் சென்றுள்ளனர்.

தோணி குளத்தின் நடுவிற்குச் சென்றபோது தோணியிலிருந்த தூவாரத்தின் வழியே நீர் தோணியை நிரப்பியுள்ளது.அதில் பயணித்த மாணவர்கள் கூக்குரலிட்டு சத்தமிட்டுள்ளனர். இந்நிலையில் ஆசிரியரான கிவேதன் குளத்தில் நீந்திச் சென்று மாணவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். இச்சந்தர்ப்பத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்று 4 பேரும் மிகவும் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அக்கிராமம் மாத்திரமின்றி அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதில் அறிவிப்பாளரும், பி.பி.கொம்.பட்டதாரியும், தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியருமான 27 வயதுடைய யோ.கிவேதன்(கிரிதன்) மற்றும்  களுமுந்தன்வெளி கஜமுன் வித்தியாலயத்தில் கல்வி கல்வி பொதுததர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன், சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...